உள்ளூர்

ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை இரண்டாயிரத்து 500 முதல் 250 வரை குறைக்கத் தீர்மானம்

ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளர்களை இரண்டாயிரத்து 500 இலிருந்து 250 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் பயணிக்கும் வாகன தொடரணியின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜனாதிபதியுடன் 15 முதல் 20 வாகனங்கள் பயணிக்கின்றன. ஜனாதிபதி பயணிக்கும் போது எதிர்காலத்தில் பாதைகளும் மூடப்படக் கூடாதென ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.