உள்ளூர்

புதிய ஜனாதிபதி முன்னிலையில் பல சவால்கள் காணப்படுவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச நிர்வாகத்தை மறுசீரமைப்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் உள்ள பிரதான சவால் என கலாநிதி ஷமில லியனகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இலக்குகளையும் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த நிர்வாகம் மட்டத்தில் புதியவர்கள் அமர்த்த வேண்டும் என அவர் கூறினார். மக்களைப் பாதுகாப்பது அரச தலைவரின் பிரதான பொறுப்பாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவங்களின் பின்னர்  மக்கள் மீதான பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என கலாநிதி லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக நிலவிய பேரளவிலான ஜனநாயகம்புதிய ஜனாதிபதியின் தெரிவின் மூலம் யாதார்த்த நிலையை அடையும் என அவர் கூறினார்.

இதேவேளைகடந்த சில வருடங்களாக அபாயத்தை எதிர்கொண்டு தேசிய பாதுகாப்புபொருளாதாரம்சமூக மற்றும் கலாசாரத் தொடர்புகளை யாதார்த்த நிலைக்குக் கொண்டு வருவதே புதிய ஜனாதிபதியின் முன்னுள்ள சவால்கள் என சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார். இதற்காக அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு ஜனாதிபதிக்கு அவசியமாகும்.

இதனை அடைய பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடு;த்தார். நாட்டில் சகல மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.