உள்ளூர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது முதலாவது அரச முறைப் பயணமாக இந்தியா செல்கிறார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதனது முதல் அரச முறைப் பயணமாக எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

புதுடில்லி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புச் செய்தியைத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரச முறைப் பயணமாக இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.