உள்ளூர்

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.

இலங்கை சோசலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

சத்தியப்பிரமாண வைபவம் ருவன்வெலிசாயவில் இன்று முற்பகல் இடம்பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.

நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.