உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மாலை மீண்டும் கூடுகிறது. குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பிரதான நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காத்தான்குடி சுபி முலிம் குழுவின் பிரதிநிதிகள் இன்று தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை வெளிப்படுத்துவது மற்றும் இவ்வாறான தாக்குதல்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்;கைகளை மேற்கொள்வது இந்தத் தெரிவுக் குழுவின் பொறுப்பாகும். அமைச்சர் ராஜித்த சேனாரட்ன, ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பத்தி விக்ரமரட்ன, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நளின் டி ஜயதிஸ்ஸ ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.