உள்ளூர்

1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்.

1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படுமென்று இதன் தலைமை நிறைவேற்று அதிகாரி ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். இதனுடன்இந்தச் சேவை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கும் திட்டம் பூரணமடைவதாக அவர் குறிப்பிட்டார். 2016ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்பியுலன்ஸ் சேவையின் மூலம் பொதுமக்களுக்குப் பெரும் நன்மைகள் கிடைக்கின்றன. இந்தச் சேவையினால் இதுவரையில் நன்மையடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார்.  இதன் மூலம் நாளொன்றுக்கு 790 பேருக்கும் அதிகமானவர்கள் பயன்பெறுகின்றனர். 1990 என்ற அவசர அழைப்பு இலக்கத்தை அழைப்பதன் ஊடாக இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.