உள்ளூர்

தற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். நாடு அரசியல்வாதிகளுக்கு அன்றி, பொதுமக்களுக்கே சொந்தமானதாகும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கொடபொல அமரகீர்த்தி தேரர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தமக்காக வேலை செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளாக அவர்களை சில காலம் நியமிக்கின்றனர். அந்தப் பணியை அவர்கள் உரிய முறையில் விளங்கிக் கொண்டு பொறுப்புடன் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு அவரை நீக்க வேண்டிய ஜனாதிபதிக்கு ஏற்பட்டதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கல்லேல்ல சுமனசிறி தெரிவித்தார்.