உள்ளூர்

அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பிணைமுறி விநியோக மோசடியுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உண்மைக்கான குரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அந்த அமைப்பின் சட்டத்தரணி ஷாப்திக்க வெல்லப்பல்லி இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

உலகின் வௌ;வேறு இடங்களிலும் மறைந்து வாழ்ந்த எல்ரிரிஈ பயங்கரவாதிகளை கைது செய்த இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வது பெரிய காரியம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.