உள்ளூர்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றம் இன்று ஆராய்கிறது.

அரசாங்க தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டமா அதிபர், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சகல மனுக்களையும் நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதோடு, பத்து மனுக்களுக்கான வாய்மூல சமர்ப்பணங்கள் நேற்று முடிவடைந்தன. எஞ்சிய மூன்று மனுக்கள் தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்கள்; இன்று இடம்பெறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட கட்சிகளும், தனி நபர்களும் மனுக்களை சமர்ப்பித்திருந்தன. பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மனுக்களை ஆராய்கின்றது.