உள்ளூர்

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்தி குறித்து விரைவில் பாராளுமன்றத்தில் விவாதம்

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் வெளிப்படுத்திய கடந்த அரசாங்கத்தின் நிதி மோசடி குறித்து ஜனாதிபதி விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் ஜனாதிபதியை கேட்டுள்ளார்.

இதுகுறித்து மஹிந்த ராஜபக்ஷ நேர்மையான முறையில் இராஜதந்திர அடிப்படையில் இந்த ஆணைக்குழுவிற்கு தமது தரப்பின் கருத்துக்களை வெளியிட முடியும். முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷவுக்கு சீனாவின் ஒரு நிறுவனத்தினால் ஒரு கோடி 90 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணம் மல்வானையில் அமைக்கப்பட்ட வீட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறான மோசடிகள் குறித்து பாராளுமன்ற விவாதம் ஒன்றை கோர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருப்பதாக அவர் நேற்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இதேவேளை, நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்தி குறி;த்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அவர் இந்த சவாலை விடுத்திருக்கின்றார்.