உள்ளூர்

கடந்த ஆட்சியின் போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் எதுவித நடைமுறைகளும் இல்லாமல் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா சாடியுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் எதுவித நடைமுறைகளும் இல்லாமல் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா சாடியுள்ளார்.

இதனால், தற்சமயம் அரசாங்கத்திற்கு ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு வரை உள்ள ஐந்து வருட காலப்பகுதியில் நிலக்கரி ஒரே நிறுவனத்திடமிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலக்கரியின் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல், 35 கோடி டொலருக்கும் அதிகமான பெறுமதியை கொடுத்து நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டதாக பிரதி அமைச்சர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

இதனால், அரசாங்கத்திற்கு பத்து கோடி டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், சமகால அரசாங்கம் முறையாக கேள்விப் பத்திர நடைமுறை மூலம் நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொண்டு நட்டத்தின் அளவை குறைத்துள்ளது. சமகால அரசாங்கம் மேற்கொண்ட நிலக்கரி கொள்வனவுகளில் எதுவித நட்டமும் ஏற்படவில்லை. உலக சந்தையில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் 20 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.