உள்ளூர்

மேல் மாகாணத்தில் மேலும் 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேலும் 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெறும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

2014ஆம், 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சைகளில் ஆகக் கூடுதலான புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக இன்று நியமனக் கடிதங்கள் கையளிக்கப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்து 822 ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள்.