Sri Lanka Brodcasting Corporation

Mon06012020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியல் உள்ளதாக வெளியான ஊடக செய்திகளுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மறுப்பு

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளரை மேற்கோள் காட்டி சமீபத்தில் வெளியான சில செய்திகள் குறித்து அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை தாம் வெளியிடத் தயாரென தவிசாளர் சாலிய பீரிஸ் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தத் தகவல்கள் தவறானவை என காணாமல் போனோருக்கான அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அலுவலகத்தின் 7 ஆணையாளர்களும், கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து காணாமல் போனவர்களின் உறவினர்களையும், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், காணாமல் போனோரின் சார்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்களையும் சந்தித்திருந்தனர். இந்தச் சந்திப்பில் அலுவலகத்தின் திட்டங்களையும், மூலோபாயங்களையும், நோக்கத்தையும் விபரித்தார்கள். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார்கள்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காணாமல் போனவர்கள் மற்றும் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் தமது அலுவலகத்தில் உண்டு என தவிசாளர் குறிப்பிடவில்லை. இந்தப் பெயர்ப் பட்டியலை பெற்றுத் தருமாறு காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தவிசாளரிடம் கேட்டுக் கொண்டார்கள். இந்த வேண்டுகோளை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இது சிக்கலான பிரச்சினையாகும். போலியான உறுதிமொழிகளையோ, உத்தரவாதங்களையோ வழங்க முடியாது என தாம் வலியுறுத்திக் கூறியதாகவும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி