உள்ளூர்

என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படவிருக்கின்றன

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மாவட்;ட மட்டங்களில் கண்காட்சிகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ இயந்திரத்தையும், கண்டி போதனா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனர் இயந்திரத்தையும் துரிதமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.