உள்ளூர்

பல்கலைக்கழகங்களின் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக புதிய கைத்தொலைபேசி எப் அறிமுகம்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக கைத்தொலைபேசி எப் வகையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.

பகிடிவதையை கட்டுபடுத்தும் பொறுப்பு உபவேந்தர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் ஆகியோரை சாரும் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய தொலைபேசி எப்பை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

தற்சமயம் பகிடிவதை மிலேச்சத்தனமானதாக மாறியிருக்கிறது. சிலரின் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஆயுதமாக இது மாறியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டில் பகிடிவதை தொடர்பான 280 சம்பவங்கள் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இவ்வாறான பகிடிவதையினால் அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ள விரும்புவதில்லை என்றும், சில மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு இடையில் விலகிச் செல்கிறார்கள் என்று அவர் கூறினார். சில மாணவர் அமைப்புக்களும் பொறுப்பற்ற விதத்தில் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு வருகின்றன என்று அமைச்சர் கூறினார்.