உள்ளூர்

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார்

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக அங்கஜன் இராமநாதன் போட்டியிடுகிறார். அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் சார்பாக டொக்டர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளேயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடுகிறது.