உள்ளூர்

மட்டக்களப்பில் மனித – யானை நெருக்கடிக்குத் தீர்வு – அமைச்சர் சரத் பொன்சேகா உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரம் பெற்றுள்ள காட்டு யானைகளின் தொல்லைக்கு தீர்வு காணும் நோக்கில் தொப்பிகலையை அண்டிய பகுதியில் மின்சார வேலிகள் அமைக்கப்படும்.

இதற்கு மூன்று கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பிரதேசத்திற்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந்த பின்னர் அவர் கருத்து வெளியிட்டார்.

இந்தப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலால் அங்கத்தவரை இழந்த குடும்பத்தினரை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேரில் சந்தித்தார். இந்தக் குடும்பத்திற்கு அவர் நிதியுதவியும் வழங்கியதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.