உள்ளூர்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாக சபை ஒன்று நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுவும் நிறைவேற்று சபையும் அகில இலங்கை நிறைவேற்று சபையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை கொழும்பிலுள்ள அபேகம முன்றலில் ஒன்றுகூடியிருந்தனர்.

அங்கு கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் கட்சியின் ஆலோசர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க, மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரடன் ஆகியொர் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவராக மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, பொதுச் செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்கான றுனுது செனவிரட்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.