உள்ளூர்

நீதித்துறையைச் சேர்ந்த எவரும் அரசியலின் பின்னால் செல்லும் பின்புலம் உருவாகக்கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையின் கீழ் நீதித்துறையைச் சேர்ந்த எவரும் அரசியலின் பின்னால் செல்லும் பின்புலம் உருவாக்கப்படக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். வத்தளை நீதிமன்றக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினால். நீதித்துறையில் மாத்திரமன்றி, சகல துறைகளையும் சேர்ந்தவர்களுக்காக திருப்திகரமாகவும் சுதந்திரமாகவும் தமது பணிகளை மேற்கொள்வதற்கான நிலையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நீதித்துறையினரும் சட்ட மா அதிபர் திணைக்களமும் அதிகாரிகளும் எதிர்நோக்கியிருந்த சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நீதிபதிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் என்பன பற்றியும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார். இவர்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கான பிரிவொன்றை ஸ்தாபிப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம் என்பனவற்றின் நீதியரசர்களை உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் குழுவை நியமித்து இந்தப் பிரிவை முன்னெடுத்துச் செல்வது பொருத்தமானதாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.