உள்ளூர்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயர் பதவியை உள்நாட்டு சுகாதார அபிவிருத்திக்காக பயன்படுத்தப் போவதாக அமைச்சர் ராஜித்த தெரிவிப்பு.


தமக்குக் கிடைத்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவர் பதவியை தனிப்பட்ட புகழுக்காக அன்றி, மக்களுக்கு சேவையாற்றவே பயன்படுத்தப் போவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த கூட்டத்தைத் தொடர்ந்து நாடு திரும்பிய அமைச்சருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

தாய்ப்பாலூட்டலை அத்தியாவசிய சுகாதார பழக்கவழக்கமாக பேணுவது தொடர்பிலும், சீனியின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பிலும் தாம் வலுவான நாடுகளுடன் போராடியதாக அமைச்சர் குறிப்பிட்டார். தென்னிலங்கையில் பரவிவரும் சுவாசத் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு ஜெனீவாவிலிருந்து நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 71ஆவது வருடாந்த அமர்வும், நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்றருந்தன. நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவர் பதவிக்கு அமைச்சர் ராஜித்த சேனாரட்ன போட்டியின்றி தெரிவாகியிருந்தார்.