உள்ளூர்

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி கண்டதாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க அறிவிப்பு.

சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் தோல்வி கண்டதாக பிரதி அமைச்சர் அசோக்க ஆபேசிங்க தெரிவித்துள்ளார்.

வழமையாக ஒவ்வொரு நாளும் 375 ரயில் சேவைகள் இடம்பெறுவது வழக்கம்;. நேற்றைய தினம் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் இரண்டு ரயில் சேவைகள் மாத்திரமே ரத்து செய்யப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் நபர்கள் ரயில் வண்டிகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுபற்றி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூலம் விசாரணை செய்து, குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

அதேவேளை, தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் எஸ்.பி.விதானகே குறிப்பிட்டார்.