உள்ளூர்

இனவாதத்தை பரப்பி, இராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்து ஆட்சிக்கு வர சிலர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இனவாதத்தை பரப்பி, இராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்து அதிகாரத்திற்கு வர சிலர் முயன்று வருகிறார்கள் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு போலிப் பிரசார நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டாலும், அரசாங்கம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்று அவர் கூறினார். கண்டியில் அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.