உள்ளூர்

நெல்லை தொடர்ந்தும் கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை நடவடிக்கை.

நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து தொடர்ந்தும் கொள்வனவு செய்யும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான களஞ்சிய வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் களஞ்சிய வசதிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் தனியார் களஞ்சியசாலைகளும் பயன்படுத்தப்படவிருக்கின்றன.