Sri Lanka Brodcasting Corporation

Tue06022020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் நோக்கில் உயர்தரப் பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் சித்தியடைந்தவர்களை இரண்டு மாகாணங்களிலிருந்து இணைத்துக் கொள்ள அமைச்சர் ராஜி;த்த சேனாரட்ன தீர்மானித்துள்ளார்.

2015, 2016, 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்கு எந்தவொரு பிரிவிலும் தோற்றி சித்தியடைந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இந்தத் தீர்மானம் கொழும்பு மாவட்டத்திற்கும் பொருந்தும். அமைச்சரவையும், அரச சேவை ஆணைக்குழுவும் இதற்கான அங்கீகாரத்;தை வழங்கியுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து தாதியர் சேவைக்கு குறைந்தளவிலானோர் விண்ணப்பிக்கின்றமை இந்தப் பற்றாக்குறைக்கான காரணமாகும். நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் 31 ஆயிரம் தாதியர்கள் பணிபுரிகின்றார்கள். தற்சமயம் ஏழாயிரத்திற்கும் அதிகமான தாதியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி