Sri Lanka Brodcasting Corporation

Tue06022020

Last updateMon, 24 Feb 2020 8pm

உள்ளூர்

இன்று இந்துக்களுக்கு வைகாசி விசாக நோன்மதி – பௌத்தர்களுக்கு பொசொன் பௌர்ணமி

இன்று இந்துக்களுக்கும் பௌத்தவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.

இந்துக்கள் இன்று வைகாசி விசாக பூரணையாகக் கொண்டாடுகின்றார்கள். இன்றைய தினம் தீமைகளை அழிப்பதற்காக முருகப்பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்த தினமாகக் கருதப்படுகிறது. இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறும்.

பௌத்தர்களைப் பொறுத்தவரையில் இன்று பொசோன் நோன்மதி தினமாகும். இதனை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள பௌத்த வணக்கத் தலங்களில் தான, தரும, தியான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன. மைத்திரி அறநெறி நிறுவனமும் மேல் மாகாண பொலிஸ் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்யும் மைத்திரி பொசோன் வலயம் இன்று பத்தரமுல்லையில் ஆரம்பமாகின்றது. இதில் அலங்காரப் பந்தல்களும், வெளிச்சக்கூடுகளும் காட்சிக்கு வைக்கப்படும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய நிலையங்களும் விசேட நிகழ்ச்சிகளை ஒலிபரப்பவுள்ளன.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி