உள்ளூர்

நாமல்-உயன பூங்காவை மத்திய கலாசார நிதியத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பிரசித்தி பெற்றுள்ள நாமல்-உயன பூங்காவை மத்திய கலாசார நிதியத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் உள்ள இளஞ்சிவப்பு நிற பளிங்குப் படிகங்கள் சகலரையும் கவர்ந்திழுப்பவை. இதனை எதிர்கால சந்ததிக்காக பேணிப்பாதுகாப்பதற்கும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாக அபிவிருத்தி செய்வதற்குமாக மத்திய கலாசார நிலையத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்தாக பூங்காவின் ஸ்தாபகர் சங்கைக்குரிய வனவாசி ராகுல தேரர் தெரிவித்தார்.

நாமல்-உயன பூங்கா 1991ஆம் ஆண்டு அமரர் ரணசிங்க பிரேமதாசவின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பூங்கா கடந்த 27 வருடங்களாக கடும் சவால்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. சமகால ஜனாதிபதியும் பிரதமரும் பூங்காவைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், தமக்குப் பின் பூங்காவை முறையாக பராமரிக்க எவரும் இல்லை என்பதைக் கருத்திற்கொண்டு இதனை மத்திய கலாசார நிலையத்தின் கீழ் கொண்டுவரத் தீர்மானித்ததாக சங்கைக்குரிய ராகுல தேரர் கூறினார்.