உள்ளூர்

குடிவரவு குடியகல்வு உத்தியோத்தர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. இவை குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தினார். அடுத்த வரும் நாட்களில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டம் கட்டமாக தீர்வு பெற்றுத்தரப் போவதாக அவர் உறுதியளித்தார்.

குடிவரவு குடியகழ்வு சேவையை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கை பற்றியும் நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டது. இந்த உத்தியோத்தர்கள் அற்றும் சேவைகளை ஜனாதிபதி பாராட்டிப் பேசினார்.