உள்ளூர்

சகல இலங்கையர்களுக்கும் அகில காப்புறுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு


இலவச சுகாதார சேவைகளின் கீழ் சகல இலங்கையர்களுக்கும் அகில காப்புறுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனராட்ன தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 71 ஆவது அமர்வில் சுகாதார அமைச்சர் உரையாற்றினார். இந்த அமர்வு கடந்த 21ம் திகதி ஆரம்பமானது. இது 28ம் திகதி வரை இடம்பெறும்.

இந்த அமர்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், சுகாதார சேவையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அதனை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும் கட்டுப்படுத்தி, முதுமை அடையும் சனத்தொகை - உளவியல் சுகாதாரம் - புற்றுநோய் முதலான சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.