உள்ளூர்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையினர் முன்வந்துள்ளார்கள்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள எட்டு மாவட்டங்களில் கடற்படையின் உயிர்ப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 38 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார். வளல்லாவிட்ட, கலவான, நிக்கவரட்டிய, ஆனமடுவ, கிரிதலே ஆகிய பிரதேசங்களில் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக கடற்படையினர் படகு மூலம் போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ளார்கள்.

இதேவேளை, நவகமுவ வடிகான் கட்டமைப்பு கடற்படையினரால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. காலி, வக்வெல்ல பாலத்தை புனரமைக்கவும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.