உள்ளூர்

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இலங்கை பொறியியல் நிறுவகம், இலங்கை கட்டட வடிவமைப்பாளர் நிறுவகம் என்பனவற்றின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது பிரதமர் கருத்து வெளியிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதும், தவறான கருத்துக்களை நீக்குவதும், இதன் நோக்கமாகும். வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு வரவழைப்பது இதன் பிரதான நோக்கமாகும். இலங்கையின் தொழில்வாண்மையாளர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் இலக்குகளாகும்.