உள்ளூர்

புhடசாலை மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த வேலைத் திட்டம் அமுல்படுத்தப்பட இருக்கிறது.

தரம் 11 இல் கற்;கும் சகல மாணவர்களுக்கும் விஞ்ஞானப் பாடத்துடன் தொடர்புடைய தகவல்கள் அடங்கிய இலத்திரனியல் உபகரணம் வழங்கப்படவுள்ளது. இதேவேளை விஞ்ஞான பாடத்திற்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு இதுபற்றி விளக்கம் அளிக்கப்பட இருக்கிறது.