Sri Lanka Brodcasting Corporation

Thu09202018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

அரசியல் கட்சிகளினதும், தொழிற்சங்க அமைப்புக்களின் மே தினக் கூட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் இன்று நடைபெறுகின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் மேதின கூட்டம் வழமை போன்று கொழும்பு பீஆர்சி விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. பேரணி பிற்பகல் 1.00 மணியளவில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெறும். பேரணி காலி கோவில்கொடல்ல விஹாரையில் இருந்து பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகும்.

ஜாதிக ஹெல உறுமயின் மேதின கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் இன்று காலை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மே தினக் கூட்டம் நாராஹென்பிட்டி சாலிகா மண்டபத்தில் பிற்பகல் நடைபெறும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி