Sri Lanka Brodcasting Corporation

Mon07232018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

நாட்டின் அரசியல் கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும கூறுகிறார்.

சுதந்திரத்தின் பின்னர் பல வருடங்கள் நாட்டில் இருந்துவந்த அரசியல் கலாசாரத்தை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மாற்றி அமைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்துவந்த முறையை மாற்றி அமைத்து, இரண்டு கட்சிகளும் சேர்ந்து நாட்டை ஆட்சி செய்யும் முறையொன்றை தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனை நடைமுறைப்படுத்தும் போது சவால்கள் எழுவது வியப்புக்குரிய விடயமல்ல. இந்த அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு அரசாங்கம் முன் நகர்ந்து செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல அனுபவங்களைக் கொண்ட முதிர்ச்சிமிக்க அரசியல்வாதியாவார். அவரின் மீது நம்பிக்கை கொண்டவர்களை இணைத்துக் கொண்டு அரசாங்கத்தின் எதிர்கால பயனத்தை முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னபெரும தெரிவித்தார்.

கடந்த ஆட்சி காலத்தில் இயங்கிவந்த ஹெல்ப்பிங் ஹம்பாந்தோட்ட, ஹெய்ஜிங் உடன்படிக்கை போன்ற விடயங்களில் ஊடகம் மௌனமாக செயற்பட்டது. எனினும், தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் காரணமாக அரசாங்கத்தை விமர்சிப்பதற்குக் கூட ஊடகங்கள் முன்வந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி