உள்ளூர்
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தத் தீர்மானம்.
- Details
- Published on 17 April 2018
- Written by slbc news
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினரின் இலக்கமாக பயன்படுத்துவதற்கு தொழிலாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குநர்களின் விபரங்கள் அடங்கிய விபரங்களுடன் திணைக்களத்தின் கணினியில் தரவுகளை புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. புதிய உறுப்பினர் இலக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார். பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள ஊழியர்களுக்கு பல இலக்கங்கள் காணப்படுகின்றன. நிதியத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளும் போது இது சிக்கலாக அமைகின்றது. இந்த நெருக்கடியை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர் இலக்கமாக அவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.