உள்ளூர்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் சேவையில்.
- Details
- Published on 17 April 2018
- Written by slbc news
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று சேவைக்கு சமூகமளித்திருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த காலத்தில் ஏற்பட்ட தாமதத்தை அவர்களின் ஆதரவுடன் விரைவில் வழமை நிலைக்குக் கொண்டுவருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட தாமதங்களை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக சனிக்கிழமை மற்றும் விடுமுறை தினங்களில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்று களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட பீடாதிபதி பேராசிரியர் திருமதி நிலந்தி டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று 15 ஆயிரத்து 600 கல்விசாரா ஊழியர்களும் சேவைக்கு சமூகமளித்ததாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.