Sri Lanka Brodcasting Corporation

Mon10222018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி லண்டன் நகரை சென்றடைந்தார்.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணைவாக வர்த்தகம், மகளிர், இளையோர் மற்றும் மக்கள் சார்ந்த நான்கு மாநாடுகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை சார்பிலும் இந்த மாநாடுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். வர்த்தக மாநாட்டில் சம்பந்தப்பட்ட நாடுகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பான தலைப்புக்களின் கீழ் கலந்துரையாடப்படும். வியாபாரம் தொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்புதல், டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகத்திற்கான வசதிகளை வழங்குதல், இதற்கான தொழில்நுட்ப பொருளாதார மற்றும் காலநிலை தாக்கங்கள் போன்ற விடயங்கள் குறித்து அங்கு கவனம் செலுத்தப்படும். மகளிர் தொடர்பான மாநாட்டில் பெண்கள் உளகளவில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கருத்திற் கொள்ளப்படும். சவால்களுக்கு மத்தியில் குரல் கொடுக்க முயற்சிக்கும் பெண்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக பங்களிப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

பொதுநலவாய இளையோர் மாநாட்டில் இந்த அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளில் வாழும் சுமார் 100 கோடி இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் அமைப்பின் எதிர்காலம் பற்றிய திட்டங்கள் வகுக்கப்படும். இளம் பிரதிநிதிகளுக்கு தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் செயல்திட்டம் ஒன்றை வகுப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி