Sri Lanka Brodcasting Corporation

Sat02232019

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

மூன்று மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் அறிக்கை பற்றி விசேட பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் பற்றி நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பற்றிய விசேட பேச்சுவார்த்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சில் இடம்பெறுகிறது.

கே.தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய குழுவினர் இதில் அங்கம் வகிக்கிறார்கள். குழுவின் முழுமையான அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட மாட்டாது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கிறது. இதற்கென அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

தற்சமயம் சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாண சபைகளுக்கான கால எல்லை முடிவடைந்திருப்பதோடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மூன்று மாகாண சபைகளின் கால எல்லை முடிவடையவிருக்கிறது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி