Sri Lanka Brodcasting Corporation

Tue05222018

Last updateFri, 18 May 2018 7pm

உள்ளூர்

அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பில் வேக அளவீட்டு முறைமை இன்றிலிருந்து அமுலாகிறது.

அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் வாகனங்களை இனங்காண்பதற்கான வேக அளவீட்டு இயந்திரக் கட்டமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படுகிறது.

இன்றிலிருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களும் கண்காணிக்கப்படவிருக்கின்றன. அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் 27 சதவீதமான விபத்துக்களுக்கான காரணம் மிகவும் வேகமாக பயணிப்பதாகும் என தெரியவந்துள்ளது. வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் வாகனங்களின் புகைப்படமும் உடனடியாக அச்சிடப்பட்டு உரிய சாரதிகளுக்கு வழங்கப்படவிருக்கிறது. இரவு நேரங்களிலும் இந்த நடவடிக்கை அமுலாகும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி