Sri Lanka Brodcasting Corporation

Thu04262018

Last updateWed, 25 Apr 2018 8pm

உள்ளூர்

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களை ஆராய்ந்து வெளியிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி நிதி பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களை ஆராய்ந்து வெளியிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி நிதி பிரிவு தெரிவித்துள்ளது.

சிறிய அளவிலான பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. இந்த விடயங்களை அமுல்படுத்தும் பொழுது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அரச கடன்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதி முகாமைத்துவம் தொடர்பில் சில பொருத்தமான பரிந்துரைகளை அமுல்படுத்துவது மத்திய வங்கியின் நிதிப் பிரிவின் நோக்கமாகும். தற்சமயம் அமுலில் உள்ள பொருளாதார மற்றும் நிதி வழங்கலுக்குரிய நிதிச் சட்ட மூலங்களின் சரத்துக்கள் தேசிய பிணைமுறி சட்டமூலத்தின் சரத்துக்கள் போன்றவற்றில் மாற்றங்களும் புதிய சரத்துக்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடன்களை முகாமைத்துவம் செய்வதில் பொறுப்புக் கூறும் நிலைமையையும், வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் திறைசேரி உண்டியல் தொடர்பாகவும், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி