Sri Lanka Brodcasting Corporation

Thu04262018

Last updateWed, 25 Apr 2018 8pm

உள்ளூர்

அரசியல் கலாசாரத்தில் உள்ள பிழைகளை திருத்தி, ஊழல் மோசடி அற்ற மக்கள் நட்புறவு ரீதியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பயணத்தில் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முதலாவது படிமுறை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அரசியல் கலாசாரத்தில் உள்ள பிழைகளை திருத்தி, ஊழல் மோசடி அற்ற மக்கள் நட்புறவு ரீதியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பயணத்தில் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முதலாவது படிமுறை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இங்குரக்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பொறுப்பேற்று சிறந்த முறையில் சேவையாற்றக் கூடிய ஒழுக்க விழுமியம் மிக்க மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் மூலம் தெரிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எனவே, இதுவிடயத்தில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒழுக்க விழுமியம் மிக்க திறமையான பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம் தேசிய அரசியல் தலைமைத்துவத்தின் சிறந்த பயணத்தை உறுதிப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் நேயம் மிக்க பிரதிநிதிகளை உருவாக்குவதன் மூலம் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிக்கலாம் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி