Sri Lanka Brodcasting Corporation

Thu04262018

Last updateWed, 25 Apr 2018 8pm

உள்ளூர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் பணிகள் இன்று ஆரம்பம்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் பணிகள் இன்று ஆரம்பமாகின. இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வடமாகாண மாவட்டங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குருநாகல், கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான அட்டைகள் இன்று தபாலில் சேர்க்கப்படும் என்று பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். ஏனைய மாவட்டங்களுக்கான தபால்மூல வாக்களிப்பு அட்டைகள் நாளைய தினம் தபாலில் சேர்க்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி