Sri Lanka Brodcasting Corporation

Wed07182018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

ராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

ராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணியளவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுளள்ளது இது தொடர்பான நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளார். நான்கு வழிப்பாதைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும். இதற்காக 471 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் டிசெம்பர் மாதத்தில் இந்த மேம்பாலத்தை திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பணியாளர்களினதும், பிரதேசவாசிகளினதும், ஏனைய தரப்புக்களினதும் ஒத்துழைப்பு காரணமாக இதனை ஜனவரி மாதத்தில் திறக்க முடிந்துள்ளதாக செயற்றிட்டப் பணிப்பாளர் பியல் வர்ணகுலசூரிய தெரிவித்தார். இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதன் பின்னர் பத்தரமுல்லைக்கும், பொரளைக்கும் இடையிலான வாகன நெரிசல் பெருமளவில் குறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி