Sri Lanka Brodcasting Corporation

Thu02222018

Last updateWed, 21 Feb 2018 8pm

உள்ளூர்

புலம்பெயர் ஆள்கடத்தை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இலங்கையில் புலம்பெயர் ஆட்கடத்தலை தடுப்பதற்கும், தேச எல்லை பாதுகாப்பிற்குமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட பொறிமுறையும் தயாரிக்கப்படவிருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் மூலோபாய கொள்கை நிறுவனம் இலங்கையில் புலம்பெயர் ஆட்கடத்தலை தடுப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்கு, வடமேற்கு, தெற்கு கடற்கரைகளை இலக்காகக் கொண்டு ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இவர்கள் மேற்கொள்ளும் ஊழல் செயற்பாடுகளும் அம்பலமாகி இருக்கின்றன. போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றை தடுப்பதற்கான விரிவான வேலைத்திட்டம் அவசியம் என்று அமைச்சர் சாகல ரட்நாயக்க சுட்டிக்காட்டினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி