Sri Lanka Brodcasting Corporation

Wed12192018

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

வரவு - செலவுத்திட்டத்தின் சாதகங்கள் பற்றி பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டை முன்னெடுத்துச் செல்ல இம்முறை வரவு - செலவுத்திட்ட யோசனைகள் உதவும் என்று அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார். சகல துறைகள் மீதும் இம்முறை வரவு - செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

வரவு - செலவுத்திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் அவர் உரையாற்றினார். வழக்குகள் தாமதம் அடைவதை தடுப்பதற்காக வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே பாராட்டி பேசினார்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க உரையாற்றுகையில், அரசியல் இலக்குடனும், தூர நோக்குடனும் வரவு - செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியின் கீழ் மூலதனம் வழங்குவதற்கான யோசனையை அவர் பாராட்டி பேசினார். அரசாங்கம் பாரியளவிலான கடன் சுமையை எதிர்நோக்கியிருந்தாலும், நலன்புரி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படவில்லை என்று அமைச்சர் நவீன் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் சகல துறைகளின் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். சுற்றாடலை பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் பாராட்டி பேசினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி