Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateWed, 22 Nov 2017 8pm

உள்ளூர்

சர்வதேச உதவிகள் மூலம் நாடு அபிவிருத்தி – ஜனாதிபதி

நாட்டை அபிவிருத்தி செய்து எதிர்கால சந்ததிக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகளை சிறப்பான முறையில் பயன்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன - தெய்யந்தர பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்களை மக்கள்மயப்படுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் உரையாற்றினார். மாத்தறை - தெய்யந்தர தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

கல்வியை அபிவிருத்தி செய்வதற்கான தி;ட்டங்களைப் போன்றே பொருளாதார அபிவிருத்திக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இதற்கமையவே 2017ம் ஆண்டை வறுமை ஒழிப்பு வருடமாகபிரகடனப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி