Sri Lanka Brodcasting Corporation

Wed12192018

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று.

இலங்கை சமூக பாதுகாப்பு விருதுவழங்கும் விழா ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை சமூக பாதுகாப்பு சபை நடைமுறைப்படுத்தும் ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழான இலக்குகளை அடைந்து கொண்ட அரச அதிகாரிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஓய்வூதியத் திட்டத்தின் கீழான நன்மைகளை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளை கௌரவிக்கும் நோக்குடன் வருடாந்தம் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி