Sri Lanka Brodcasting Corporation

Tue09182018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் வர்த்தக முதலீட்டு துறைகளை வலுவூட்டுவதன் அவசியம் பற்றி கவனம் செலுத்தியுள்ளன.

இருதரப்பு வர்த்தக முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை – அவுஸ்திரேலிய பிரதமர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் மல்கெம் ரேண்பூல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட செயலகத்தை ஸ்தாபிக்க எடுத்துள்ள தீர்மானத்தை அவுஸ்திரேலிய பிரதமர் பாராட்டிப் பேசினார். இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பான சட்ட வரைபுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய அவுஸ்திரேலியாவுடன் இதற்குத் தேவையான இணைப்புப் பணிகளை மேற்கொள்வார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாறுவதற்கான இலங்கையின் அபிலாஷையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.
கப்பல் போக்குவரத்தின் சுதந்திரப் பாதையாக இந்துசமுத்திரத்தை மாற்றியமைக்க இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்குகின்றன. மத்தள, ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியாவும் சீனாவும் ஒத்துழைப்பு வழங்குகின்றன. மாலைதீவின் தற்போதைய நிலை பற்றியும் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். சுதந்திரமானதும் நீதியானதுமான தேடுதலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது பற்றியும் அவர்கள் கலந்துரையாடினார்கள். புதிய அரசியல் யாப்பிற்கான முயற்சிகள் பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. சர்வதேச வர்த்தகம், முதலீடுகள் தொடர்பான சட்டகத்தை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி