Sri Lanka Brodcasting Corporation

Mon08202018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் அடங்கிய யோசனை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஒழுங்கு விதிகள் அடங்கிய பிரேரணையை அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவிடம் நாளை கையளிக்கவுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களது கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாகும். அவர்களது கருத்துக்களும் யோசனைகளும் கிடைக்குமாயின் அது பற்றியும் கவனம் செலுத்தப்பட இருக்கின்றது.

இது தொடர்பான சட்ட மூலம் அடுத்த வாரம் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆணைக்குழுவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினத்தை அறிவிக்க முடியும் என்றும் அதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இது தொடர்பாக கட்சிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் போட்டியிட 70 அரசியல் கட்சிகள் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பிற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார். மாவட்ட மேலதிக தேர்தல்கள் ஆணையாளருக்கோ உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கோ அல்லது தெரிவத்தாட்சி அலுவலர்களாக பணியாற்றும் மாவட்ட செயலாளர்களுக்கோ இதற்கான அங்கீகாரத்தை வழங்க முடியும். 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி