Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

உள்ளூர்

இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்பை பின்லாந்து பிரதமர் பாராட்டியுள்ளார்.

இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்பை பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா பாராட்டியுள்ளார். பின்லாந்து நாடு சுதந்தரமடைந்து 100 வருடங்கள் நிறைவடையும் வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளமை இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைவதற்கான வரலாற்று ரீதியான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஹெல்சிங்கி நகரில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று அவர் சந்தித்த வேளையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இரு நாட்டுப் பிரதமர்களுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இதன்போது இடம்பெற்றது. கல்வி, சுகாதாரம், நிலைபேறான எரிசக்தி, டிஜிற்றல் மயம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தொழில்துறை மறுசீரமைப்புக் குறித்து பின்லாந்தின் அனுபவங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. பின்லாந்தின் எரிசக்தி தயாரிப்பு தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலும் பல்வேறு வர்த்தகங்களுக்காக முதலீடு மற்றும் நிவாரண வட்டியின் கீழான கடனை வழங்குவதற்கும் உடன்படுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். பிராந்திய சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்படடது. இலங்கை சுதந்திரமடைந்து 70 வருட பூர்த்தி கொண்டாட்டம் அடுத்த வருடம் இடம்பெறும்.; இலங்கைக்கு விஜயம் செய்து, அந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி