Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

உள்ளூர்

ஜனநாயகமும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்ட நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

தாய்நாட்டை உலகின் மிகச் சிறந்த நாடாக முன்னேற்றுவது தனது ஒரே நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி அனைத்து இலங்கையர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. இலங்கையில் சுபீட்சத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட நடவடிக்கையினால் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களை ஜனாதிபதி சந்தித்த வேளையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

வறுமையில் இருந்து நாட்டை விடுவித்தல், கடந்த யுத்த காலப்பகுதியி;ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச ரீதியில் எதிர்நோக்கப்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் கடும் கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் தேசிய நல்லிணக்கததைக் கட்டியெழுப்புவதற்குமான பணிக்கான இக்காலப்பகுதியில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர், கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாததனால் தற்போதைய அரசாங்கத்திற்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாட்டின் மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை படிப்படியாக நிறைவேற்றியுள்ளஅரசாங்கம் இன்று முன்னோக்கிப் பயணிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.சில இணையத் தளங்களும், இணையத்தின் ஊடாகவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். தனது ஒரே இலட்சியம் சர்வதேச ரீதியில், தாய்நாடான இலங்கையை உன்னதமான நிலைக்கு கொண்டுவருவதே தமது நோக்கம் என்றார். அனைத்து மக்கள் மத்தியிலும் அவநம்பிக்கை மற்றும் பீதியை நீக்கி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, அனைத்து இலங்கையர்களும் மகிழ்ச்சியுடன் வாழும் நாடொன்றை கட்டியெழுப்புவதே நோக்கமாகும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி